AP MahaBharathi IAS (Photo Credit: @RaviraajAqua X)

பிப்ரவரி 28, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வரும் 3 வயதுடைய சிறுமி ஒருவர், கடந்த பிப்.24 அன்று 16 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் சிறுமி எதிர்ப்பு தெரிவித்து சத்தம் எழுப்பியதால், ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியை செங்கல் கொண்டு கடுமையாக தாக்கினார். இதனால் சிறுமியின் கண் மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். Rowdy Murder Case: ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பல்.. பரபரப்பு சம்பவம்..!

ஆட்சியர் அதிர்ச்சி பேச்சு:

இதனிடையே, இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் (Mayiladuthurai Collector) தலைமையில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு மற்றும் போக்ஸோ சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பாக, ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி (A.P MahaBharathi IAS), காவல் கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது பேசிய ஆட்சியர் மகாபாரதி, "கடந்த பிப்.24 அன்று 3 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட விஷயத்தில், சிறுமியின் மீதும் தவறு உள்ளது. எனக்கு கிடைத்த தகவலின் படி, 3 வயது சிறுமி சிறுவனின் மீது எச்சில் உமிழ்ந்து இருக்கிறார். சிறுமியின் மீதும் தவறு உள்ளதால், இரண்டு பக்கத்திலும் நாம் அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம்" என பேசியுள்ளார். Wife Kills Husband: நடத்தையில் சந்தேகம்; கணவரை தின்னர் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி கைது..! 

சர்ச்சையானதால் ஆட்சியர் விளக்கம்:

இந்த விஷயம் தொடர்பான காணொளி மற்றும் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், ஆட்சியர் தற்போது தனது பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது, குழந்தைகளுக்கு பெற்றோர் பாலியல் துன்புறுத்தல் விஷயங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவ்வாறாக பேசினேன். இதில் வேறெந்த விஷயமும் இல்லை" என விளக்கம் அளித்துள்ளார். எனினும், ஆட்சியரின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஆட்சியர் மகாபாரதி பேசிய காணொளி: