Chennai Puzhal Death Case (Photo Credit : Youtube / Pixabay)

ஜூலை 02, புழல் (Chennai News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். செல்வராஜுக்கு திருமணம் முடிந்து மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். தம்பதியின் மகன்களான சுமன் ராஜ், கோகுல்ராஜ் இருவரும் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார்கள். நேற்று இரவு நேரத்தில் செல்வராஜ், சுமன் ராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் ஒரே அறையில் படுத்து உறங்கியுள்ளனர். தாய் மற்றும் மகள் வீட்டின் மற்றொரு அறையில் உறங்கியுள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் கணவர் மற்றும் மகன்களின் அறையில் எந்த சத்தமும் இல்லாமல் இருந்துள்ளது.

மயங்கிய நிலையில் கிடந்த தந்தை, மகன்கள் :

இதனை தொடர்ந்து நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மூவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனால் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது. முதற்கட்டமாக தொழில் பிரச்சனையில் செல்வராஜ் தனது மகன்களுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. Gold Rate Today: படிப்படியாக எகிறும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!

ஜெனெரேட்டரிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு :

அதனை தொடர்ந்து காவல்துறையினர் அறையை சோதித்த போது ஜெனரேட்டர் புகை தொடர்பான தடையும் தென்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவு மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் உபயோகம் செய்ததாக கூறப்படும் நிலையில், அதிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு புகை (Carbon Monoxide Death) காரணமாக மூவரும் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதனால் மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் உடற்கூறு ஆய்வு தகவலுக்காக காத்திருக்கின்றனர். இந்த விஷயம் குறித்த தகவலறிந்த கொளத்தூர் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.