Accused Surya (Photo Credit : @sunnewstamil X)

ஜூன் 06, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அதிமுக பிரமுகர் சூர்யா (வயது 18). இவரின் மாமா அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகம் என்று கூறப்படுகிறது. இதனால் மாமாவின் பெயரை சொல்லி பல இடங்களில் இவர் அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக இளைஞர் பாசறை 118 வது வட்ட செயலாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மாணவியிடம் நடுரோட்டில் காதலிக்க சொல்லி முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.

மாமாவின் பெயரை சொல்லி ஓசி பிரியாணி :

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான சூரியாவுக்கு அதிகாரிகள் வலைவீசி உள்ளனர். இவர் தனது மாமாவின் பெயரைச் சொல்லி அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டுவது, இலவச பிரியாணி வழங்க சொல்லி தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேக்கப் பொருட்களை சாப்பிட்டதால் விபரீதம்?.. 24 வயது இன்ஸ்டா பிரபலம் பரிதாப மரணம்.. ரசிகர்களுக்கு ஷாக்.! 

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3