Victim Raj Kamal | Crime File Pic (Photo Credit: YouTube / Pixabay)

செப்டம்பர் 02, கடம்பத்தூர் (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கமல். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி, கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் அவரின் உறவினர்கள் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என போரட்டம் நடத்தி இருந்தனர். திருமணமான 2 மாதத்துக்குள் ராஜ்கமல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

5 தனிப்படை அமைத்து விசாரணை:

ராஜ்கமலின் உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஹரி பிரசாத் மற்றும் அவரின் நண்பர்கள் 6 பேர் சேர்த்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும், இவர்கள் செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேரில் சென்ற அதிகாரிகள் குற்றவாளிகளை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சி தகவல் வெளியானது. Gold Rate: நகைப்பிரியர்களுக்கு தித்திப்பு செய்தி.. தங்கம் சவரன் ரூ.37,000/- செம்ம வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க.! 

யார் கெத்து? போட்டியில் கொடூர கொலை:

அதாவது, கடம்பத்தூர் கிராமத்தில் மேல் பகுதி நபர்களுக்கும், கீழ் பகுதி நபர்களுக்கும் யார் ஊரில் கெத்து என்ற பிரச்சனை நீடித்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ராஜ்கமலை கடந்த ஓராண்டுக்கு முன் ஹரிபிரசாத் கும்பல் தாக்கியுள்ளது. இதனால் ஹரியை பழிவாங்க வேண்டும் என ராஜ்கமல் திட்டமிட்டுள்ளார். மேலும், அடியாட்களுக்கு கஞ்சா வாங்கி கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தி தீர்த்துக்கட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அறிந்த ஹரி தான் முந்திக்கொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்காக யூடியூப் வீடியோ பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார்.

கொடூர கொலை:

பின் சம்பவத்தன்று இவர்களின் திட்டப்படி கூட்டாளிகளுடன் சேர்த்து ராஜ்கமல் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொடூர கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடம்பத்தூர் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத், ஸ்ரீனிவாசன், நெல்சன், கார்த்திக், நாதன், 17 வயது சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் காவல் துறையினரிடம் ஆயுதத்தை எடுத்து கொடுப்பதாக அழைத்துச் சென்று, தப்பிக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஹரி பிரசாத் உட்பட 3 பேருக்கு கை-கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்களை அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் அனுமதித்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.