ஏப்ரல் 21, வண்டலூர் (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம், வண்டலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருபவர் ராஜேஷ் குமார் (வயது 45). இவர் தனது கல்லூரியில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மாணவியிடம் அன்பாக பேசி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர், கடந்த 2 ஆண்டுகளாக மாணவிக்கு திருமண ஆசை காட்டி அத்துமீறி இருக்கிறார். நீச்சல் தெரியாமல் கிணற்றில் ஆனந்த குளியல்.. கல்லூரி மாணவர்கள் இருவர் பலி.. காப்பாற்ற சென்றவரும் கரைசேராத சோகம்.! நீரில் மூழ்கி பலி..!
கருக்கலைப்பு விபரீதம்:
இந்த கொடுமை 2 ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக ராஜேஷ் குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். வேறொரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வரும் பெண் ஒருவரை ராஜேஷ் குமார் கரம்பிடித்து இருக்கிறார். இதனிடையே, கல்லூரி மாணவி கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் அவருக்கு கருக்கலைப்பு செய்யலாம் என தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பேராசிரியர் கைது:
அங்கு மாணவிக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்படும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் கவலைக்கிடமான நிலைக்கு சென்றதால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் சிகிச்சைக்காக மாணவி தற்போது அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்த தாழம்பூர் காவல்துறையினர், 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.