AIADMK Election Campaign (Photo Credit : @sunnewstamil X)

ஜூலை 06, மேட்டுப்பாளையம் (Coimbatore News): அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகத்தை கையில் எடுத்து சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இன்று ஜூலை 7ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். Edappadi Palanisamy: அம்மனை தரிசித்து சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி.! 

கோவில் தரிசனம் :

ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தலா 1 இடம் என மக்கள் அதிகம் கூடும் இடத்தை தேர்வு செய்து அங்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு எதிரான பல்வேறு கருத்துகளை முன் வைத்து எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளார். தேர்தல் வியூகம் தொடங்குவதை முன்னிட்டு தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிச்சாமி, சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பிரத்தியேக பிரச்சார வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணம் திருடப்பட்டதால் பரபரப்பு :

இந்த நிலையில், பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு வந்த அக்கட்சியின் ஒன்றிய நிர்வாகி தங்கராஜ் என்பவரின் ரூ.1 லட்சம் பணம் களவாடப்பட்டுள்ளது. அவரது பேண்ட்டின் பையை கிழித்து இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பணத்தை திருடிய மர்ம நபர்களுக்கு மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வலை வீசியிருக்கின்றனர்.