Kodaikanal Illegal Liquor Shop Smashed (Photo Credit: @Pethuppara1981 X)

பிப்ரவரி 04, கொடைக்கானல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் (Kodaikanal Liquor Shop Vandalized), பெருமாள்மலை, பழனி பிரதான சாலையில், பழனி பிரிவு பகுதியில் சாராயக்கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. சட்டவிரோதமாக, வாடகைக்கு கிடைத்த அறையில் சாராயக்கடை திறக்கப்பட்டு, காலை 06:00 மணிமுதல் நள்ளிரவு 12:00 மணிவரை சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த சட்டவிரோத கும்பலின் செயலால், குடிமகன்கள் சாராய கடையிலேயே முகாமிட்டு வந்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக காவல் நிலையம் உட்பட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. குடிகார ஆசாமிகள் அவ்வழியே வந்து செல்வோரிடம் வம்பிழுத்து, போதையில் பெண்களை ஆபாசமாக பேசி தொந்தரவு செய்து வந்துள்ளது. இதனால் நேற்று இரவில் ஆவேசத்தின் உச்சத்திற்கு சென்ற பெண்கள், 10 க்கும் மேற்பட்டோர் நிகழ்விடத்தில் திரண்டு சாராயக்கடையை முற்றுகையிட்டனர். Kanchipuram & Velankanni Tourism: வேளாங்கண்ணி, காஞ்சிபுரம் முன்னேற்றத்திற்காக ரூ.18 கோடி ஒதுக்கீடு - மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.!

பாட்டில்களை உடைத்து பதறவைத்த பெண்கள்:

குடிமகன்கள் பெண்கள் வரும் ஆக்ரோஷத்தை பார்த்து தெறித்து ஓட, சிக்கிக்கொண்ட வியாபாரிகள் இறுதி கட்டமாக சாராயத்தை பாதுகாக்க முற்பட்டனர். சாராய வியாபாரிகளின் மிரட்டல், கெஞ்சலுக்கு அடிபணியாத பெண்கள், பெட்டியில் இருந்த சாராயத்தை வீதிக்கு தூக்கி வந்து சுக்கு-சுக்காக உடைத்து நொறுக்கியெடுத்தனர். ஆவேசத்தில் வீசப்பட்ட சாராய பாட்டில்கள் நாலாபுறமும் சிதறி பறந்தன. சாராயக்கடை வந்ததில் இருந்து 8 வயது சிறார்கள் முதல் 30 வயது சிறார்கள் வரை மதுபோதைக்கு அடிமையாகி வரும் நிலையில், சாராயக்கடைக்கு ஆதரவான கும்பல், குடிகாரர்களை தட்டிகேட்கும் நபர்களை ஆட்கள் வைத்து அடிப்பதாக ஆதங்கம் தெரிவித்த பெண்கள், சாராய பாட்டில்களில் ஒன்று கூட மிச்சம் பெறாமல் இருக்க அனைத்தையும் அடித்து நொறுக்கினர். சட்டவிரோதமாக பல நாட்களாக சாராய விற்பனை நடைபெறுகிறது என்றால், அங்கு காவல்துறை எந்த மாதிரியான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துவதாக சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

சாராய பாட்டில்களை உடைத்து நொறுக்கிய பெண்கள்: