TN Govt Bus Driver Cum Conductor Job Requirement (Photo Credit: @keerasrs / @arasubus X)

மார்ச் 20, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில அரசுப்போக்குவரத்து கழகத்தில், காலியாக இருந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது. அதன்படி, மாநில அரசுப் போக்குவரத்துக்கு சொந்தமான 8 கழகத்தில், 25 மண்டலத்தில், காலியாக இருக்கும் இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துனர் என காலியாக இருக்கும் 3274 காலிப்பணியிடங்கள் நிரப்படுகிறது. ஓட்டுநர், நடத்துனர் வேலை விண்ணப்பம், அரசின் http://www.arasubus.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில், நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்காணும் நடைமுறையில் அனுப்ப வேண்டும். Thoothukudi Kothanar Song: தூத்துக்குடி கொத்தனார் பாடல்; ஒரிஜினிலை சீரழித்த டூப்ளிகேட்..! 

3274 பேருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையில் பணியாற்ற வாய்ப்பு:

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (Chennai MTC), அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC & TNSTC), விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, திருநெல்வேலி மண்டலங்களில் 3274 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 364 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 318 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். மண்டல வாரியாக தேர்வு செய்யப்படும் நபர்கள் விபரம் பின்வருமாறு,

விழுப்புரம் மண்டலம்:

விழுப்புரம் 88, வேலூர் 50, காஞ்சிபுரம் 106, கடலூர் 41, திருவண்ணாமலை 37 = மொத்தம் 322

கும்பகோணம் மண்டலம்:

கும்பகோணம் 101, நாகப்பட்டினம் 36, திருச்சி 176, காரைக்குடி 185, புதுக்கோட்டை 110, கரூர் 48 = மொத்தம் 756

கோவை மண்டலம்:

கோவை 100, ஈரோடு 119, ஊட்டி 67, திருப்பூர் 58 = மொத்தம் 344

மதுரை மண்டலம்:

மதுரை 190, திண்டுக்கல் 60, விருதுநகர் 72 = மொத்தம் 322

சேலம் மண்டலம்:

சேலம் 382, தர்மபுரி 104 = மொத்தம் 486

திருநெல்வேலி மண்டலம்:

திருநெல்வேலி 139, நாகர்கோவில் 129, தூத்துக்குடி 94 = மொத்தம் 362

பணி நியமனம்: அரசின் விதிமுறைகளை பின்பற்றி இன சுழற்சி முறையில் பணி நியமனங்கள் செய்யப்படும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக பொது வகுப்பு பிரிவினருக்கு 40, பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 44, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 45, ராணுவத்தில் பொதுப்பிரிவினருக்கு 50 வயது, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 55 வயது ஆகும். Annadanam Benefits: அன்னதானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? விபரம் உள்ளே.!

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

முக்கிய தகுதிகள்: செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுனர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாதங்கள் பணி அனுபவம், முதலுதவிச் சான்று, நடத்துனர் சான்று, முன்அனுபவம் சான்று அவசியம்.

உயரம் மற்றும் எடை: குறைந்த பட்சம் 160 சென்டிமீட்டர், எடை 50 கிலோ கிராம்.

உடல் தகுதி: தெளிவான குறைபாடு இல்லாத கண்பார்வை பெற்று இருத்தல், எந்த விதமான உடல் குறைபாடும் இல்லாதவர்.

விண்ணப்ப கட்டணம்: தகுதியும் விருப்பமும் உடையவர், அரசின் அதிகாரப்பூர்வ இணையத்திலிருந்து http://www.arasubus.tn.gov.in/ விண்ணப்பிக்கலாம். வங்கி சேவை கட்டணமாக எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ. 590, எம்பிசி உட்பட பிற பிரிவினருக்கு ரூ.1180 வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணம் திரும்ப செலுத்தப்பட மாட்டாது.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, நேர்காணல் மூலமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இறுதிநாள்: 21 மார்ச் 2025 மதியம் 01:00 மணி முதல் 21 ஏப்ரல் 2025 மதியம் 01:00 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் பணி விண்ணப்பம்: http://www.arasubus.tn.gov.in/