
மார்ச் 15, சங்ககிரி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி (Sangagiri), பழைய பேருந்து நிறுத்தத்தில் சம்பவத்தன்று குறுக்குச்சாலையை தம்பதிகள் தங்களின் இருசக்கர வாகனத்தில் கடக்க முற்பட்டனர். அங்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல் அதிகாரியும் ஈடுபட்டு இருந்தார். வாகனங்கள் வராதபோது சாலையை இருசக்கர வாகனம் கடந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி ஒன்று, முன்னால் இருந்த வாகனங்களின் மீது மோதி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், தம்பதியில் கணவர் மனைவியின் கண்முன் துடிதுடிக்க உயிரிழந்தார். TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பு அறிவிப்பு.. வேளாண் பட்ஜெட் 2025: அறிவிப்புகள் என்னென்ன? விபரம் இதோ.!

லாரி பிரேக் பிடிக்காமல் சோகம்:
விபத்து ஏற்பட்டதும் உடனடியாக இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதிலும், அவர் படுகாயமடைந்து இருந்த காரணத்தால் மரணம் ஏற்பட்டது. இந்த விஷயம் இலங்கையின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சங்ககிரி காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், லாரி பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்து காரணமாக, இளைஞர் மனைவி கண்முன் தலைநசுங்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த பதறவைக்கும் காணொளி:
கண்முன்னே உடல் நசுங்கி இறந்த கணவன் - கதறி அழுத மனைவி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி#salem | #cctv | #thanthitv pic.twitter.com/9Zs1krVsKR
— Thanthi TV (@ThanthiTV) March 15, 2025