Ottapidaram Baby Dies Case (Photo Credit: @PPTVOnlinenews X / Pixabay)

பிப்ரவரி 03, ஓட்டப்பிடாரம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் (Ottapidaram), பரமன்பச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் சோமசுந்தரம். இவரின் மனைவி காஞ்சனா தேவி. தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரின் அன்புக்கு அடையாளமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தார். தற்போது அக்குழந்தைக்கு 2 வயதாகும் நிலையில், சபீனா பானு என பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று வீட்டில் துணிகளை துவைக்கும் பணியில் காஞ்சனா தேவி ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, அவருடன் குழந்தையும் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. தாயைப்போல குழந்தையும் துணிகளை அண்டாவில் இருந்து எடுத்து கீழே வைத்து விளையாடி இருக்கிறது. Governor RN Ravi: ஆளுநரை நீக்க மனுதாக்கல்; பச்சை கொடி காண்பித்த உச்ச நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு.! 

குழந்தை பரிதாப மரணம்:

அப்போது, தாய் வேறொரு வேலையை கவனிக்க வீட்டிற்குள் சென்றுவிட, 2 வயது குழந்தை அண்டாவுக்குள் தலைகீழாக விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்து உயிரிழந்தது. தாமதமாக வந்த காஞ்சனா குழந்தை அன்டுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார். பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, அங்குள்ள பசுவந்தனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கிருந்து குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. குழந்தையை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அதன் மரணத்தை உறுதி செய்தனர். பின் தகவல் அறிந்த பசுவந்தனை காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் இருக்கும் பச்சிளம் பிஞ்சுகளை நொடிபொழுது கவனிக்க தவறினாலும், எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.