Supreme Court of India | TN Governor RN Ravi (Photo Credit: @MohammedZonaid8 / @rajbhavan_tn X)

பிப்ரவரி 03, புதுடெல்லி (New Delhi): தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இடையே கருத்து ரீதியிலான முரண்பாடுகள் தொடருகிறது. இதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடரை, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்து வெளியேறினார். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றபோது, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்ட வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், இதனை சபாநாயகர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது மரபு என விளக்கம் அளித்தனர். Today Rasi Palan: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி? இன்றைய ராசி பலனை உடனே தெரிஞ்சிக்கோங்க.! 

தமிழ்நாடு அரசு Vs தமிழ்நாடு ஆளுநர்:

இதுபோன்ற பல விஷயங்களில் ஆளுநர் - தமிழ்நாடு அரசு இடையே நிலவி வந்த கருத்து முரண் தொடர்ந்து வந்தது. ஒருசில நேரம் அரசியலமைப்பு சட்டங்களை சட்டப்பேரவையில் தீர்மானமாக இயற்றி, ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்போது, அவை காலதாமதமும் செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, வழக்கறிஞர் ஜெய்சுகீன் என்பவர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்து, திரும்ப பெற வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் வந்தது. Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.! 

மனு தள்ளுபடி செய்து உத்தரவு:

அப்போது, மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "ஆளுநர் ஆர்.என் ரவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. புதிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள இயலாது. மனுதாரரின் மனு தாக்கல் தொடர்பான விஷயங்கள் அரசியலமைப்புக்கு புறம்பான கோரிக்கை. ஆதலால், இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள இயலாது" என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பொதுநல மனுத்தாக்கலாக செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேற்கூறிய வழக்கு விஷயத்தில், உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு பச்சைக்கொடி காண்பித்து, வழக்கை முறையீட்டில் தொடக்கத்திலேயே தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறது.