செப்டம்பர் 17, நெல்லை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு புறவழிச்சாலை பகுதியில், கடந்த ஓராண்டாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராஜா புதுக்குடி பகுதியை சேர்ந்த தாய், தந்தை, மகன், பேத்தி என நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் சீய்த்தனர். இவர்கள் அனைவரும் வடக்கு புறவழிச்சாலையில் பயணம் செய்தபோது, எதிர்திசையில் டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை முந்திச்செல்ல முயன்ற வாகன ஓட்டி, எதிர்திசையில் வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சிக்கிய நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். School Holiday: 1 - 8ம் வகுப்பு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை; புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு.!
நால்வர் பரிதாப பலி:
நால்வரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிந்து, டேங்கர் லாரியின் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டார். அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், சாலை விரிவாக்க பணிகளால் கடந்த ஓராண்டாகவே அப்பகுதியில் விபத்துகள் நடப்பது தொடர்கதையுள்ளது. சிறிய அளவில் பெரும்பாலும் நடந்த விபத்துகள், இன்று பெரிய அளவில் நடந்து நால்வரின் உயிரை பறித்து இருக்கிறது. வாகனத்தில் பயணம் செய்தவர்கள் தலைக்கவசம் இன்றியும் பயணித்து இருக்கின்றனர். விபத்தில் பலியானது கண்ணன், அவரின் 2 மகள்கள், மாமியார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.