Enforcement Directorate Pallipattu Raid (Photo Credit: @Idam_valam / @Way2news_local X)

செப்டம்பர் 13, பள்ளிப்பட்டு (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு (Pallipattu), குமாரராஜபேட்டை காலனியில் வசித்து வருபவர் தமிழரசன் (வயது 27). அங்குள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அரவிந்த் (வயது 25), பிரகாஷ் (வயது 31). இவர்கள் மூவரும் சோளிங்கர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இவர்கள் மூவரும் வேலையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆன்லைன் வாயிலாக வேலை செய்து வந்ததாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், இவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து மொத்தமாக ரூ.3 கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த விசயம் குறித்த தகவல் அமலாக்கத்துறை (Enforcement Directorate) அதிகாரிகளுக்கு தெரியவந்தது. Elephant Dies: 54 வயதுடைய குன்றக்குடி கோவில் யானை தீ விபத்தில் மரணம்; நள்ளிரவில் நடந்த சோகம்.! 

20 மணிநேரம் தொடர் விசாரணை:

இதனையடுத்து, நேற்று அமலாக்கத்துறை (Pallipattu ED Raid) அதிகாரிகள் தமிழ்செல்வன், அரவிந்த், பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இவர்களின் உறவினர் அருணா என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கிட்டத்தட்ட 20 மணிநேரத்தை கடந்தும் தொடர் விசாரணை நடைபெற்றது. இதற்காக சிஆர்பிஎப், காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 10 மணிநேரம் தனித்தனி குழுவாக பிரிந்து வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், பின் பள்ளிப்பட்டு காவல் நிலையத்திலும் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். தற்போது இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பெங்களூரில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் திடீர் பணம் வந்தது எப்படி? அதனை எப்படி பெற்றார்கள்? யாருக்கு அனுப்பினார்கள் என தீவிர விசாரணை நடைபெறுகிறது.

மோசடி பணத்தை பிரச்சனையின்றி பெற புது டெக்னீக்?

மோசடி செயல்களில் ஈடுபடுவோர், தங்களின் மோசடி செயல்களுக்கு வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி, தகுந்த நபர்களின் கணக்கில் பணம் செலுத்தி எடுத்துவிட்டு, பின் அவர்களுக்கு கமிஷனாக தொகை வழங்கி சம்பாத்தியம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த முறையிலேயே இவர்களுக்கும் தலா ரூ.1 கோடி என மொத்தமாக ரூ.3 கோடி பணம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.