மே 01, புதுடெல்லி (Weather Update in India): பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் இருந்து இந்தியாவில் மெல்லமெல்ல அதிகரிக்க தொடங்கிய வெப்பநிலை, தற்போது வரலாற்றில் இல்லாத அளவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு கோடைகாலமும் இந்தியாவின் வடமாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் தென்மாநிலங்களில் கடுமையான அளவு உணரப்பட்டு வருகிறது. கடந்த 4 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் கடும் வெயிலின் தொடக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பலரும் வெயில் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தனர்.

வெயிலில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்: இதனால் அம்மை, வெயில்கால நோய்கள் அதிகரிக்க தொடங்கின. தற்போது கடுமையான அளவு அதிகரித்துள்ள வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, மக்கள் நண்பகல் வேளைகளில் பயணங்களை தவிர்க்கவும், வெளியே செல்லும்போது குடை, நீர் போன்றவற்றை எடுத்துச்செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உடலுக்கு குளிரச்சியை வழங்கும் இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி உட்பட பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. Australia Squad For 2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்?.!

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெயில் இந்தியா முழுவதிலும் வாட்டி வதைக்கப்போவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில்,

"கங்கை நதியை ஒட்டியுள்ள மேற்குவங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலத்தில் மே மாதம் 2ம் தேதி வரை கடுமையான வெப்ப அலை நீடிக்கும். இம்மாநிலங்களில் அதிக வெப்பத்திற்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள ராயலசீமா, சௌராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, கடலோர ஆந்திரப்பகுதி, ஏனாம், கொங்கன், தமிழ்நாடு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம், ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலை நிலவும்.

வடமேற்கு இந்தியாவை பொறுத்தமட்டில், அங்குள்ள மாநிலங்களில் வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அடுத்த 2 நாட்களுக்கு குறையலாம். எனினும், அடுத்த 5 நாட்களில் மத்திய இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்" என தெரிவிக்கப்ட்டுள்ளது.