ஆகஸ்ட் 03, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ் (வயது 28). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். விக்னேஷின் மனைவி சங்கீதா. தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில், 2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. சமீபத்தில் கர்ப்பமாக இருந்த சங்கீதாவுக்கு கடந்த ஜூலை 28ஆம் தேதி பெண் குழந்தையும் அறுவை சிகிச்சை முறையில் பிறந்துள்ளது. இதனிடையே நேற்று அதிகாலை நேரத்தில் குழந்தைக்கு பாலூட்டி, தாய் தூங்க வைத்துள்ளார். Gold Rate Today: ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. ஆப்பு வைத்த தங்கம் விலை.. மீண்டும் உச்சக்கட்டம்.!
அசைவின்றி இருந்த குழந்தை :
பின் இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தபோது குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி குடும்பத்தினர் உதவியுடன் சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்கு அனுமதி செய்தார். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். பிறந்த ஆறு நாட்களேயான குழந்தை உயிரிழந்ததால் குடும்பத்தினர் சோகமடைந்த நிலையில், தகவலறிந்து வந்த பட்டினம்பாக்கம் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவரின் விளக்கம் :
மேலும் இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், குழந்தை தாய்ப்பால் குடித்துவிட்டு அப்படியே உறங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம். பாலூட்டிய பின்னர் குழந்தைக்கு ஏப்பம் வந்துவிட்டதா? அது எந்த நிலையில் இருக்கிறது? என்பதை பார்த்து உறங்க வைக்க வேண்டும். செரிமானம் ஏற்பட ஏதுவாக குழந்தையின் முதுகு பகுதியை தடவி கொடுக்கலாம். ஏப்பம் வருவதை உறுதி செய்வதும் நல்லது. இதனால் பால் வாந்தி எடுப்பதும் தவிர்க்கப்படும் என" தெரிவித்தார்.