Kanchipuram Fire Factory Explodes (Photo Credit: Twitter)

மார்ச் 22 , குருவிமலை (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை (Kuruvimalai, Kanchipuram) பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு (Fire Crackers Factory) குடோனில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சப்தத்தோடு வெடித்து சிதறின.

இதனை குடோன் முற்றிலும் எரிந்து (Firecrackers Factory Explodes Accident) நாசமான நிலையில், அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர், விபத்து குறித்து தீயணைப்பு & மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Patna Police: பீகார் மாநில முதல்வருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல்; குஜராத் இளைஞரை கைது செய்தது பீகார் காவல்துறை.! 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பியவர்களில் 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குடோன் உரிமையாளர் நரேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

நிகழ்விடத்திற்கு அமைச்சர் தா.மோ அன்பரசன், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உட்பட பல உயர் அதிகாரிகளும் வந்தனர்.