Accuse Nandhini - Ranjith (Visuals Form Spot)

ஜனவரி 14, ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் (Hosur, Krishnagiri) தேர்ப்பட்டை பகுதியில் வசித்து வருபவர் நந்தினி (வயது 25). இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 மாதங்களுக்கு முன் நந்தினியின் கணவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், குழந்தைகளோடு தனியே இருந்தவருக்கு பார்வதி நகரில் வசித்து வந்த ரஞ்சித்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஞ்சித்தும் தனது மனைவியை பிரிந்து வசித்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து (Living Together) புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என முடிவெடுத்து இருவரும் ஓசூரில் உள்ள ஆலூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர்.

இதற்கிடையே ரஞ்சித் நந்தினியின் மகன்களை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதனால் அவர் தனது 6 வயது மகனை விடுதியில் சேர்த்துவிட்டு, 3 வயது மகனை மட்டும் தன்னுடன் வைத்துகொண்டுள்ளார். Nithyananda Kailasa: கடலில் தேடிய கைலாசவுக்கு அங்கீகாரம் வழங்கிய சிஸ்டர் சிட்டிஸ் அமைப்பு.. மக்களை ஷாக்கில் ஆழ்த்தும் பகீர் செய்தி.! 

3 வயது குழந்தை அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக நினைத்த ரஞ்சித் (3 Year Old Child Boy Killed), டிசம்பர் 6ல் நந்தினியின் மகனை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். குழந்தை ஓசூர் மற்றும் தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது..

சிகிச்சை நிறைவுபெற்று டிசம்பர் 22ம் தேதி நந்தினி குழந்தையுடன் வீட்டிற்கு வந்த நிலையில், 27ம் தேதி குழந்தை உயிரிழந்துவிட்டதாக கோகுல்நகர் சுடுகாட்டில் புதைத்துள்ளனர். குழந்தையின் மரணத்தை வெளியே கூறக்கூடாது என நந்தினியை ரஞ்சித் மிரட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி 10ம் தேதி பொங்கல் பரிசு வாங்க நந்தினியின் தாய் வள்ளி, நந்தினியுடைய குடும்ப அட்டையை வாங்க வீட்டிற்கு வந்தபோது இளையபேரனின் மரணம் தொடர்பான செய்தி அறிந்த வள்ளி, சிறுவனின் பெரியப்பாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி தகவல் உறுதியாகவே, சுடுகாட்டில் புதைக்கப்ட்ட குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இருவரும் கைதுக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 14, 2023 11:45 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).