Madurai Chithirai Festival Flag Flys on (Photo Credit: ANI Twitter)

ஏப்ரல் 24, மதுரை (Madurai News): மதுரை மல்லிகை நகரம், தூங்க நகரம் என்று பல அடைமொழிகளை கொண்ட மதுரை மாநகரில் உள்ள மீனாட்சி & அழகர் கோவிலில் சித்திரை திருவிழா (Chithirai Festival) ஆண்டு தோறும் நடைபெறும். இந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்து தெய்வங்களான சிவன் & பார்வதி சொக்கநாதர்களாக மதுரை மாநகரை ஆட்சி செய்தார்கள் என்பது சான்றோர் வாக்கு. நடப்பு சித்திரை திருவிழாவையொட்டி கோவிலின் 4 கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. TN Govt Approved Liquor: விளையாட்டு மைதானம், திருமணங்களில் அரசு அனுமதியோடு மதுபானம் அருந்தலாம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!

சித்திரை திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு அம்பாள் வெவ்வேறு அம்சத்துடன் காட்சி தந்து நல்லாசி வழங்குவார்கள். ஏப்ரல் மாதம் 30 ம் தேதி மீனாட்சிக்கு பட்டாபிஷேகமும் நடைபெறும். மே மாதம் 1ம் தேதி திக் விஜயத்தன்று பக்தர்கள் மாசி வீதிகளில் அலைமோதுவர்கள்.

சித்திரை தேரோட்டம் மே 3ம் தேதி நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று மே 5ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கி மக்களுக்கு அருள்பாலிப்பார். அன்றைய நாளின் இரவில் இராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும் அரங்கேறும்.