தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இனி மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு அனுமதியளிக்கப்படும் பட்சத்தில் அந்த இடத்தில் மதுபானம் அருந்திக் கொள்ளலாம்.
முன் அனுமதி பெறாமல் இது போன்ற செயல்கள் நடைபெறும் பட்சத்தில் அது குறித்து கண்டறியப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதிப்படி மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம். அதற்குரிய கட்டண விபரங்களும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. CSK Vs SRH: டாசில் வென்று பவுலிங் தேர்வு செய்த எம்.எஸ் தோனி.. சென்னை மண்ணில் மீண்டும் வெற்றி பெறுமா சி.எஸ்.கே..!
முன்னதாக தொழிலாளர் வேலை நேரம் நீட்டிப்பு தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் போது, தமிழக அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், தற்போது திருமணங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் அரசு அனுமதியோடு மதுபானம் அருந்தலாம் என்ற அறிவிப்பானது பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.