Medical Facemask File Picture (Photo Credit: LLU News)

மார்ச் 31, சென்னை: தமிழ்நாட்டில் (Tamilnadu) கொரோனா பரவல் (Corona Virus) அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசு

(TN Govt) அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (M.Subramanian), தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதலாக முகக்கவசம் (Facemask Mandatory Who Went Hospital) அணிந்து வரவேண்டும். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என கூறினார். Madhya Pradesh Ram Temple: கிணற்று படிக்கட்டில் கூட்டமாக நின்று பூஜை.. பாரம் தாங்காமல் நடந்த விபத்தில் 18 பேர் பலி.! 

கடந்த வாரம் இந்திய அளவிலான கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மத்திய அரசு தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்பட பல மாநில அரசை கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தது. இதற்கிடையில் தான் தமிழகத்தின் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கவே, அமைச்சர் அதற்கான முதற்கட்ட  நடவடிக்கையை அறிவித்துள்ளார்.