Rape File Pic | Cannabis (Photo Credit: PTI and Wikimedia Commons)

மே 04, ஊட்டி (Nilgiris News): நீலகிரி (Nilgiris) மாவட்டத்தில் உள்ள ஊட்டி (Ooty), சோலைக்காடு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின சிறுமிக்கு 14 வயது ஆகிறது. அவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த வாரம் அவர் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு திரும்ப மாணவிகளுடன் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது, அவ்வழியே சென்ற பழங்குடியின இளைஞர் ரஜ்னேஷ் என்பவர், சிறுமியிடம் தான் உன் வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறேன் என காரில் ஏற்றியுள்ளார். கயவனின் கொடூர எண்ணம் புரியாத சிறுமியும் அவருடன் காரில் செல்ல, காட்டுப்பகுதிக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். பின்னர் அவர் அங்கேயே கொலை செய்யப்பட்ட நிலையில், ரஜ்னேஷ் அங்கிருந்து தப்பி சென்று விடுகிறார்.

மாலை நேரத்தில் பள்ளிக்கு சென்ற மகள் வீட்டிற்கு வரவில்லையே என பதறிய பெற்றோர், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விசாரணை செய்துவிட்டு காவல் நிலையம் சென்று புகார் அளிக்கிறார்கள். புகாரை ஏற்ற காவல் துறையினர் விரைந்து விசாரணை செய்கையில், சிறுமி இறுதியாக ரஜ்னேஷ் காரில் பயணித்தது உறுதியானது. ஆனால், ரஜ்னேஷ் தலைமறைவானதால் அவர் தேடப்படுகிறார். HC On Romantic Relationship Of Minors: விருப்பப்பட்டு இணையும் சிறார்களை தண்டிக்க போக்ஸோ கிடையாது – மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

இதற்கிடையில் சிறுமியின் சடலம் காட்டுப்பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட, அவர் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது உறுதியானது. காவல் துறையினரின் தீவிர முயற்சியால் ரஜ்னேஷ் கைது செய்யப்பட, விசாரணையில் சம்பவத்தன்று கஞ்சா போதையில் சிறுமியை தன்னுடன் நயவஞ்சகமாக அழைத்து சென்ற ரஜ்னேஷ், சிறுமியை காட்டுப்பகுதிக்குள் வைத்து பலாத்காரம் செய்து இருக்கிறான்.

பின்னர் இதனை எவரிடத்திலும் கூறக்கூடாது என எச்சரிக்க, சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமுற்ற ரஜ்னேஷ் சிறுமியை இரும்பு ஸ்பேனரால் தாக்கி கொலை செய்துள்ளார். திரைப்பட பாணியில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அங்கு அதிகரித்து வந்த கஞ்சா விற்பனை காரணமாகவே சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரை போல இனி வேறு யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கும், காவல் துறையினருக்கும் கோரிக்கை வைக்கின்றனர்.