ஜனவரி 26, (Chennai News): இந்திய குடியரசு தினம் 2025 (Republic Day 2025) இன்று வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி (RN Ravi), தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) ஆகியோருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசிய கொடி ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களால் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இராணுவ அதிகாரிகள் வழங்கிய மரியாதையை தமிழ்நாடு ஆளுநர் & முதல்வர் ஏற்றுக்கொண்டனர். இந்திய விமானப்படை, கடற்படை, இராணுவம் என முப்படைகளும், கடலோர காவல் படையினர், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் உட்பட பல பாதுகாப்பு படை அதிகாரிகள் அணிவகுப்பு நடத்தி இருந்தனர். மேலும், மாநில அளவில் பாரம்பரிய இசைக்கலைஞர்கள், நடன கலைஞர்கள் தலைமையில் அணிவகுப்பு நடந்தது. Republic Day 2025: இந்தியர்களே கொண்டாடுங்கள்.. 76 வது குடியரசு தினம் இன்று: வரலாறு, வாழ்த்துச் செய்தி இதோ.!
கண்கவர் அணிவகுப்பு:
அப்போது, இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள டி19 இராணுவ பீரங்கி, ஐஎன்எஸ் விக்ராந்த் மாதிரி தோற்றம், வான் படையின் ஏவுகணைகள், கடலோர காவல்படை ஊர்தி சூர்ய தேஜா, முன்னாள் இராணுவ படைப்பிரிவினர், சிஆர்பிஎப் படையினர், ஆர்பிஎப் படையினர், தமிழ்நாடு காவல்துறை, ஆயுதப்படை பிரிவு அதிகாரிகள், பேரிடர் மீட்பு படை பரிவு, தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், சாலை பாதுகாப்பு காவல்துறை அணிவகுப்புகளும் நடைபெற்றன. அணிவகுப்புகளை முன்னிட்டு சென்னை மாநகரில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில், மக்கள் கூடும் இடங்களில் சோதனையும் நடத்தப்படுகிறது.
குடியரசு தின நிகழ்ச்சி அணிவகுப்புகள் நேரலை காணொளி: