Tie Knoted Couple With Friends

ஜனவரி 27, அறந்தாங்கி: புதுக்கோட்டை (Pudukkottai) மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி (Aranthangi), மீமிசல் பகுதியில் வசித்து வருபவர் காத்தமுத்து என்ற மணிகண்டன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் (Singapore) பணியாற்றி வந்துள்ளார். இறுதியாக கடந்த 2 ஆண்டுகள் ஹாங்காங்கில் (Hong Kong) வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, ஹாங்காங் நாட்டினை சேர்ந்த பெண்மணியான சென் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

பின்னர், காதல் ஜோடி திருமணம் செய்ய முடிவெடுத்து, தங்களின் பெற்றோரிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இவர்களின் காதல் கடல்கடந்த நாடுகளுக்கு இடையே இருந்ததால் முதலில் இருதரப்பிலும் தயக்கம் வெளிப்பட்டுள்ளது. YGee Mahindra about Rajinikanth : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் – ஒய்.ஜி மகேந்திரன் அதிரடி பேச்சு.. அதிர்ந்துபோன அரங்கம்.!

மனதை தளரவிடாத காதல் ஜோடி, தங்களது காதலில் உறுதியாக இருந்ததால் இருதரப்பும் திருமணத்திற்கு பச்சைக்கொடி காண்பித்துள்ளது. தனது வாழ்க்கை துணைவியை அவர் தேர்வு செய்தாலும், தமிழ் கலாச்சாரப்படியே திருமணம் என்ற விஷயத்தை மணிகண்டனின் பெற்றோர் முன்வைத்துள்ளனர்.

அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத செலின் குடும்பத்தினர், தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, புதுக்கோட்டையில் உள்ள திருவருப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தம்பதிகளின் திருமணம் நடைபெற்றது.

மணமகன் மனைவிக்கு தாலிகட்டி திருமணத்தை முடித்துவைத்தார். இவர்களுக்கு தம்பதிகளின் நண்பர்கள், உறவினர்கள் தங்களின் வாழ்த்துக்களை மனதார தெரிவித்தனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 27, 2023 09:39 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).