மார்ச் 26, ஏற்காடு (Salem News): தனிமனித ஒழுக்கம் என்பது இல்லாவிடில், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், அதனைதொடர்ந்த துயரமும் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. குடும்பத்தின் வறுமைக்காக வெளிநாடு சென்று பணியாற்றி வந்த பெண்மணி, திருமணமான இளைஞருடன் கொண்ட பழக்கத்தால் இறுதியில் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்ணின் பிஞ்சுகள் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சூட்கேசில் சடலம் மீட்பு: சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பாதை பகுதியில், 40 அடி பாலத்திற்கு அருகில் சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டனர். அரைநிர்வாணத்துடன், முகம் அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டது. இதனால் பெண்ணின் அடையாளத்தை காண இயலாமல் அதிகாரிகள் விழிபிதுங்க, சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, சூட்கேஸை வாங்கியவருக்கு அதிகாரிகள் வலைவீசியபோது, அவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, பறவைக்கோட்டை பகுதியில் வசித்து வரும் நட்ராஜ் (32) என்பது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதிர்ச்சிதரும் வகையில் உண்மை வெளியானது.

வெளிநாட்டில் ஏற்பட்ட நட்பு: திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்த நட்ராஜ், கத்தாரில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தேனி மாவட்டத்தில் உள்ள முத்துலாபுரம் பகுதியை சேர்ந்த சுபலட்சுமி (33) என்பவரும் பணியாற்றி இருக்கிறார். சுபலட்சுமிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர், விவாகரத்து பெற்று கணவரை பிரிந்தவர் ஆவார். வெளிநாட்டில் தமிழர்கள் என்ற முறையில் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் நெருக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இருவரும் வேலைக்கு சென்ற இடத்தில் கள்ளக்காதல் வயப்பட்டு, உல்லாசமாக கேட்பார் இன்றி சுற்றி வந்துள்ளனர். Restricting Social Media Access for Children: 14 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதலக்கணக்குகள் பயன்படுத்த தடை; சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்..! 

Crime Murder (Photo Credit: Pixabay)

கணவன்-மனைவியாக வாழ்க்கை: பின் கடந்த ஆண்டில் விடுமுறை எடுத்து தாயகம் வந்தவர்கள், தங்களின் வீட்டில் கத்தார் செல்வதாக கூறிவிட்டு கோயம்புத்தூரில் இருக்கும் பீளமேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது காதல் மிகுதியில் கள்ளக்காதலி பெயரை நடராஜ் பச்சைகுத்தியும் வைத்துள்ளார். கணவன் - மனைவியாக இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், பிப்ரவரி 27ம் தேதி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நட்ராஜ், கம்பியால் சுபலட்சுமியை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சடலத்துடன் ஊர் ஊராக திரிந்த  பயங்கரம்: ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த நட்ராஜ், கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது நண்பருடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றனர். உடலை வீச பாதுகாப்பான இடம் மற்றும் காவல்துறையினர் கண்டறியாத பகுதி தேடி 2 நாட்களாக சடலத்துடன் சுற்றியுள்ளனர். அச்சமயம் ஏற்காடு மலைக்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சுற்றுலா வந்த நினைவுகள் மலர், மார்ச் 01ம் தேதி இரவில் 40 அடி மலைப்பாதை பாலத்தில் சூட்கேஸ் வீசப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு பயந்து சொந்த ஊர் சென்றவர், கோவை வீட்டிற்கு வருகை தந்து சந்தேகம் வராமல் இருக்க வேலைக்கும் சென்றுள்ளார். இறுதியில் காவல் துறையினர் நட்ராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் கனிவளவன் ஆகியோரை கைது செய்தனர். Virat Drop a Love Moment after Victory: பெங்களூர் அணியின் முதல் வெற்றியை, குழந்தைகளுடன் கொண்டாடிய விராட்; வைரல் கிளிக்ஸ் இதோ.! 

பச்சை குத்தியதை அழித்து வந்த சண்டையில் கொலை: அதாவது, நட்ராஜ் தனது மனைவியின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருந்த நிலையில், சுபலட்சுமி தனது பெயர் உன் உடலில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆசை நாயகியின் அன்புக்கு இணங்கிய நட்ராஜ், கையில் அவரின் பெயரை பச்சைகுத்தியுள்ளார். மனைவி, குழந்தைகளை பார்க்கச்சென்றபோது பச்சையை அழித்துவிட, மீண்டும் வீட்டிற்கு வந்தவரிடம் கைகளில் தனது பெயர் இல்லாததை சுபலட்சுமி கண்டுள்ளார். இதன்பின்னரே வாக்குவாதம் ஏற்பட்டு கொலை சம்பவம் நடந்துள்ளது.