![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/03/Theni-Bus-Accident-Visuals-from-Spot-380x214.jpg)
மார்ச் 06, வருசநாடு (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள வருஷநாட்டில் (Varusanadu, Theni) இருந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் (Thirumangalam, Madurai) நோக்கி தனியார் பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்தில் 50க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். அதனைப்போல, வெள்ளிமலையில் இருந்து போடிக்கு (Bodi, Theni) அரசு பேருந்து பயணம் செய்தது.
இந்த பேருந்தில் 30க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த இரு பேருந்து வாகன ஓட்டிகளும் வருசநாடு - தேனி (Varusanadu Theni Road) சாலையில் போட்டாபோட்டிக்கொண்டு வாகனத்தை யாகியுள்ளனர். மேலும், ஒருவரையொருவர் முந்தி (Govt Bus and Private Bus Drivers Challenge Ends Accident) செல்வதில் மும்மரமாக இருந்துள்ளனர். Couple Fight Suicide: மனைவியை கொலை செய்ய முயற்சித்து, பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.!
இதற்கியயில், திடீரென இருசக்கர வாகனத்தில் பெண்மணி குறுக்கே வந்துள்ளார். அவரின் மீது மோதாமல் இருக்க தனியார் பேருந்து ஓட்டுநர் சடன் பிரேக் அடித்துள்ளார். இதனால் அரசு பேருந்து பின்னால் வந்துகொண்டிருந்த நிலையில், அதே வேகத்துடன் முன்னே சென்ற தனியார் பேருந்து மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் பின்புறமும் - அரசு பேருந்தின் முன்புறமும் சேதமடைந்தன. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 14 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்தால் தேனி - வருசநாடு சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதனை அதிகாரிகள் சரி செய்தனர்.