Chennai Lights Out (Photo Credit: @kamalsh62624609 X)

செப்டம்பர் 13, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள மணலி, அலமாதி துணை மின்நிலையம் 400 கிலோவாட் திறன் கொண்ட முக்கிய மின் நிலையங்களில் ஒன்றாகும். இங்கிருந்து சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சார சேவை தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வழங்கப்படுகிறது. இதனிடையே, நேற்று நள்ளிரவு நேரத்தில் திடீரென துணை மின் நிலையத்தில், மின்சாரம் வழங்கும் மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது. Enforcement Directorate: திருவள்ளூர் இளைஞர்களின் வங்கிக்கணக்கில் ரூ.3 கோடி வந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்.. மூவரும் கைது: அமலாக்கத்துறை அதிரடி.!

மின்விளக்குகள் எரியவில்லை:

இந்த விபத்தில் மத்திய சென்னை, வடசென்னை, தென் சேன்னை பகுதிகளில் ஒட்டுமொத்த மின்சேவையும் துண்டிக்கப்பட்ட காரணத்தால், மொத்தமாக மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் இரவில் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்ட நிலையில், முக்கிய நகரின் சாலைகளும் இருளில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் மின்விளக்குகள் எரியவில்லை.

மின்வாரியம் விளக்கம்: 

இதனையடுத்து, போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், நள்ளிரவு 2 மணிக்குள் அனைத்தையும் சீர்படுத்தி மின்விநியோகம் வழங்கினர். இதனால் மக்களின் அத்தியாவசிய சேவைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியத்தின் உதவியுடன் உடனடியாக சென்னை மக்களுக்கு மின்சேவை சீரமைக்கப்படும் செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிலமணிநேரங்களில் மின் விநியோகம் சீரானது.

மின்விநியோகத்தை சீராக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்:

பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி:

இருளில் மூழ்கிய சென்னை நகரின் சில காணொளிகள்: