டிசம்பர் 26, கோயம்புத்தூர் (Coimbatore News): சென்னையில் உள்ள கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, மெக்கானிக்கல் துறையில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், தன்னுடன் நான்காம் ஆண்டு பயின்று மாணவரை, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது இருவரும் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமையாக சந்தித்துக்கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று இரவு உணவு சாப்பிட்ட காதல் ஜோடி, அங்குள்ள தனிமை பகுதியில் சந்தித்துக்கொண்டனர். அப்போது, இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர், காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி, காதலனை அடித்து துரத்திவிட்டுள்ளார். DMK MP Kanimozhi: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்., "நெஞ்சமே பதறுது" - கனிமொழி கடும் கண்டனம்.!
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை:
பின் கல்லூரி மாணவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். அதனையும் வீடியோ எடுத்து வைத்து, தான் அழைக்கும்போதெல்லாம் வர வேண்டும் என மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றவாளியான ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன், தனிமைக்கு செல்லும் ஜோடிகளை குறிவைத்து, இவ்வாறான அதிர்ச்சி செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது. ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை ஆவேசம்:
இந்நிலையில், கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (TN BJP Annamalai) இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாம் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு எனவும், இதற்காக நாளை காலை கோவையில் உள்ள தனது இல்லம் முன்பு நின்று 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என உறுதி ஏற்கிறேன் என அவர் ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து திமுகவிற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம் என கூறினார்.
அண்ணாமலை பரபரப்பு பேட்டி:
#WATCH | During a press conference, Tamil Nadu BJP President K Annamalai removed his shoe and said, "From tomorrow onwards until the DMK is removed from power, I will not wear any footwear..."
Tomorrow, K Annamalai will protest against how the government handled the Anna… https://t.co/Jir02WFrOx pic.twitter.com/aayn33R6LG
— ANI (@ANI) December 26, 2024