MK Stalin | Tirupati Stampede (Photo Credit: @mkstalin / @jsuryareddy X)

ஜனவரி 09, சென்னை (Chennai News): ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தில் உள்ள திருப்பதி (Tirupati Stampede), வெங்கடாசலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி (Vaikunda Ekadasi) சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, இன்று காலை 5 மணியளவில், இலவச தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடுகள் நடந்தன. இதனிடையே, அளவுக்கு அதிகமாக பக்தர்கள் கூடியதால், நேற்று இரவு 8 மணியளவில் திடீரென டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது.

6 பேர் பலி., 30 பேர் படுகாயம்:

இதனால் கூட்டநெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தால், பலரும் முண்டியடித்து டிக்கெட் வாங்க சென்றனர். சிலர் கீழே விழுந்துவிட, அவர்களை ஏறி மிதித்து டிக்கெட் வாங்க கூட்டம் முண்டியடித்து சென்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலம், பொள்ளாச்சியைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். Tirunelveli: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது.! 

தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது:

கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விசயத்திற்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கலை தெரிவித்தனர். ஆந்திர முதல்வர் இன்று திருப்பதி விரைகிறார். திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகமும் மன்னிப்பு தெரிவித்தது.

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்:

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், திருப்பதியில் நடந்த துயரம் வேதனையை தருவதாக இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோர் நலன்பெற விழைவதாகவும் அவர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பு: