செப்டம்பர் 24, சென்னை (Chennai News): சென்னையில் வசித்து வந்த வெங்கடேசன் - ராணி தம்பதிக்கு மகளாக பிறந்த IAS அதிகாரியான பீலா தனது தந்தை எல்.என்.வெங்கடேசனின் பெயரை கடந்த 2023 ஆம் ஆண்டு மாற்றி இருந்தார். என்.எல்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் பிஜிபியாக பொறுப்பு வகித்து பின் ஓய்வு பெற்றவர் ஆவார். இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி பகுதியாகும். வெங்கடேசனின் மனைவி ராணி சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக பணியாற்றி இருக்கிறார்.
திருமண வாழ்க்கையில் மனக்கசப்பு :
பீலா வெங்கடேசன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் என்பவரை கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் காவல்துறையில் சிறப்பு டிஐஜியாக பணியாற்றி இருந்தார். ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணைக்கு பின் தம்பதிகளிடையே மனக்கசப்பு உண்டாகியதாக கூறப்படுகிறது. Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ரூ.85,000ஐ கடந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.!
பீலா வெங்கடேசன் மறைவு :
இந்நிலையைில்,தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் (வயது 56) புற்றுநோய் காரணமாக (Beela Venkatesan Death) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று காலமானார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா சமயத்தின் போது தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளராகவும் இவர் பணியாற்றி இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.