அக்டோபர் 07, சென்னை (Chennai News): இந்திய விமானப்படையின் (Indian Air Force) 92 வது ஆண்டு தினத்தையொட்டி, அக்டோபர் ஆறாம் தேதியான நேற்று சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் (Marina Beach), சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முன்னிலையில் வான் சாகச நிகழ்ச்சிகள் (Air Show Chennai) காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், எதிர்பார்த்ததை விட அதிக அளவு மக்கள் ஒரே நேரத்தில் மெரினாவில் குவிந்தனர்.
திரும்பும் திசையெல்லாம் மக்கள் வெள்ளம்:
தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி (Velachery), ஆவடி மார்க்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மெரினா செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. வேளச்சேரி இரயில் நிலையத்தில் ஒதுங்ககூட இடம் இல்லாமல் மக்கள் இரயிலுக்காக காத்திருந்தனர். பலர் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்தனர். மேலும், மெட்ரோ ரயிலிலும் (Chennai Metro) மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், சென்னை ஸ்தம்பிக்கும் அளவு பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவசர ஊர்தி செல்லக் கூட வழியில்லாத சூழல் என அடுத்தடுத்து சங்கிலித்தொடர் விளைவுகள் ஏற்பட்டு இருந்தன. Chennai Air Show: இலட்சக்கணக்கில் திரண்ட சென்னை மக்கள்.. வானில் சாகசம் செய்து அசத்திய இந்திய விமானப்படை.. அசத்தல் கிளிக்ஸ் இங்கே.!
4 பேர் பலி., 90 பேருக்கு உடல்நலக்குறைவு:
இதனால் எதிர்க்கட்சிகள் சாகச நிகழ்ச்சி தொடர்பான விஷயத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தவில்லை என தொடர் குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கின்றனர். நேற்று சென்னையில் வெளுத்து வாங்கிய சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, மெரினா கடற்கரைக்கு வந்தவர்களில் 90 க்கும் மேற்பட்டோர் உடல்நல பாதிப்பை சந்தித்ததாகவும், இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்:
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மக்கள் நல வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பதிவில், "சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
மருத்துவ குழுக்கள் இருந்தன:
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. பெண் ஆசிரியையின் அந்தரங்க வீடியோ லீக்; அந்த விசயத்திற்கு சம்மதிக்காததால் 15 வயது சிறார் கும்பல் அதிர்ச்சி செயல்.!
தற்காலிக கழிவறைகள்:
ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பாதுகாப்பு பணியில் 7500 காவலர்கள்:
அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் வான் சாகச நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவு:
சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய…
— Subramanian.Ma (@Subramanian_ma) October 6, 2024