MK Stalin with Ratan Tata (Photo Credit: @MKStalin X)

அக்டோபர் 10, சென்னை (Chennai News): இந்திய தொழில்துறையில் மிகப்பெரிய டாடா (TATA) எனும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட ஓய்வறியா உழைப்பாளி ரத்தன் டாடா (Ratan Tata), உடல்நலக்குறைவால் 86 வயதில் காலமானார். அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. டாடாவின் மறைவு இந்தியாவையே உலுக்கியுள்ள நிலையில், பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

மு.க ஸ்டாலின் இரங்கல் (MK Stalin Condoles Ratan Tata):

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வலைதளபதிவில், "ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. இந்திய தொழில்துறையின் உண்மையான வைரம் அவர். பணிவு, இரக்கத்தின் கலங்கரை விளக்கமாகவும் அவர் விளங்கி இருந்தார். அவரின் தொலைநோக்கு பார்வை டாடா குழுமத்தை மட்டுமல்லாது, உலகளாவிய பார்வையையும் மாற்றியது. இந்தியாவை ஒருங்கிணைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கல் என இடைவிடாத பணிகளை செய்து பலகோடி மனிதர்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாக இருந்தவர். இந்தியா ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட தூணை இழந்துவிட்டது. அவரின் செயல்பாடுகள் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும். இந்த சோக தருணத்தில் அவரின் குடும்பத்தினர், சக ஊழியர்கள், டாடா குழுமத்திற்கு இரங்கலை தெரிகிறேன்" என கூறியுள்ளார். PM Modi Condoles: இந்திய வர்த்தகத்தின் நாயகன் ரத்தன் டாடா மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.! 

Ratan Tata (Photo Credit: Instagram)
Ratan Tata (Photo Credit: Instagram)

எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் (AIADMK Edappadi Palanisamy Condoles Ratan Tata):

தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்திக்குறிப்பில், "டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் திரு. ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும். மறைந்த ரத்தன் டாடா அவர்தம் குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் இரங்கல் (PMK Anbumani Ramadoss Condoles Ratan Tata):

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "இந்தியாவின் புகழ்பெற்ற டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ரத்தன் டாட்டா, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர். ஏழைகளுக்கும் மகிழ்ந்து கிடைக்க வேண்டும் என்று போராடியவர். அவரது மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும்" என கூறியுள்ளார்.

அண்ணாமலை இரங்கல் (BJP Annamalai Condoles Ratan Tata):

பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், "ரத்தன் டாடா அவர்களின் மறைவு வருத்தத்தை தருகிறது. தனது வாழ்நாள் முழுவதும் தொண்டு, தொழிற்துறையில் புதிய வளர்ச்சி என இந்தியாவுக்கே புதிய அர்த்தத்தை கொடுத்தவர். ஒவ்வொரு குறுகிய கால தேவையிலும் நியாயமான நடைமுறையால் இந்தியாவின் நலனை பாதுகாத்தவர். அசைக்க முடியாத நிர்வாகத்திறன் வாயிலாக நமது மனதை வென்றவர் இன்று நம்முடன் இல்லை. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். டாடா குழுமத்திற்கு, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எனது இரங்கல் தெரிவிக்கிறேன்" என கூறியுள்ளார்.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்:

தமிழ்நாடு மாநில எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்:

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்:

பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்: