ஜூன் 08, சேலம் (Salem): சேலம் மாவட்டத்தில் உள்ள காகாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீசன் (வயது 56). இவர் அங்குள்ள சிவதாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் 16 வயது சிறுமி சிறுமிக்கு ஜெகதீசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. Kanyakumari News: வெளிநாடு வேலைக்கு செல்ல காத்திருந்தவர் விபத்தில் பலி.. பிரியாணி வாங்கவந்தபோது சோகம்.!
போக்ஸோவில் கைதான ஆசிரியர் :
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது ஜெகதீசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.