ஏப்ரல் 27, ஆலங்குளம் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் (Alangulam, Tenkasi), குருவன்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அய்யாத்துரை (வயது 61). இவருக்கு மூன்றரை வயது இருக்கும் போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பார்வை முற்றிலும் (Visually Impaired) பறிபோயுள்ளது.
அதற்காக அவரின் பெற்றோர் பல இடங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பார்த்தும் பலனில்லை. இவர் பார்வையற்ற நபராக இருந்தாலும், தான் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். அதற்கேற்ப தனது அறிவு கூர்மையால், தேங்காய் உரிப்பதை கற்று தேர்ந்துள்ளார். VCK Supporter Murder: சரித்திர பதிவேடு குற்றவாளியான வி.சி.க பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை; சென்னையில் பரபரப்பு.!
தினமும் காலை 6 மணிக்கு வேலைக்கு வரும் அய்யாதுரை, மதியம் 2 மணியளவில் வீடு திரும்பி விடுவார். இவருக்கு மனைவி மற்றும் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் பெண் பிள்ளைக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார்.
தற்போது 61 வயதாகும் அய்யாதுரை தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரின் மனைவி பீடி சுற்றி வருகிறார். இவர்களின் மகன் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு கிடைத்த வேலைகளை செய்து வருகிறார். அவருக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.