பிப்ரவரி 04, நந்தம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் காலநிலை உச்சி மாநாடு (Tamil Nadu Climate Summit 2025) இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இன்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் (MK Stalin), காலநிலை உச்சி மாநாடு 3.0 ஐ சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "காலநிலை மாற்றத்தை கல்வியில் இருந்து தொடங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளியிலும் சூழல் மன்றம் ஏற்படுத்தப்பட்டு, காலநிலை கல்வி கொள்கை அறிவிக்கப்படும். காலநிலை உச்சி மாநாட்டின் வாயிலாக இனி முன்னெடுக்கப்படும் திட்டங்கள், அனைவருக்குமான காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த விழிப்புணர்வுகள் மாணவர்கள் மூலம் கொண்டு செல்லப்படும். அரசுத்துறை அலுவலர்களுக்கு காலநிலை தடுப்பு பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை காரணமாக பாதிக்கப்படும் வேளாண்மை, நீர்வளத்துறை அதிகரிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். Liquor Shop Smashed: சல்லிசல்லியாக நொறுங்கிய பாட்டில்கள்.. சட்டவிரோத சாராயக்கடையை எதிர்த்து கொடைக்கானலில் பெண்கள் ஆவேசம்.!
சுற்றுசூழல்-பொருளாதாரம் இரண்டு கண்கள்:
பசுமை இல் வாயுக்களை குறைக்க தீர்வு காணப்படும். வெப்ப அலை மாநில பேரிடர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலங்களில் வெப்ப அலை காரணமாக உயிரிழப்பு நேர்ந்தால், அவர்களுக்கு ரூ.4 இலட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையில் இருந்து தப்பிக்க மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெப்ப அலைக்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மாநில நிதியை பயன்படுத்தலாம் எனவும் முன்னரே அரசு அறிவித்துள்ளது. கோடைகாலத்தில் மக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, தாகத்தை போக்க அங்கங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்படும். பேரிடர் மேலாண்மை நிதியையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி உள்ளது. காலநிலை மீது அக்கறை கொண்ட சமூகமாக மாற நாம் வேண்டும். உலகளாவிய காலநிலை குறிக்கோளை அடைய உறுதுணையாக நாம் இருக்க வேண்டும். சுற்றுசூழல் - பொருளாதாரம் இரண்டு கண்கள் போன்றது" என பேசினார்.