Mattuthavani Arch Demolish (Photo Credit: @ourMadurai X)

பிப்ரவரி 13, மாட்டுத்தாவணி (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள மாட்டுத்தாவணி (Mattuthavani), ஆம்னி பேருந்து நிலையம் அருகில், மதுரை மாநகரின் நுழைவு வாயில் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வளைவு, இன்று வரை பிரம்மாண்டமாக இருந்து வருகிறது. மாட்டுத்தாவணியின் முக்கிய பகுதியில், ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் பகுதியில் அலங்கார வளைவு இருக்கிறது. காலப்போக்கில் சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, அலங்கார வளைவு சாலையின் நடுவே இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்பட்டு வந்த நிலையில், மதுரை மாநகராட்சி நிர்வாகம் நக்கீரர் தோரண வாயில் இடிக்கப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். Chennai EMU Train: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை இடையேயான மின்சார இரயில்கள் முற்றிலும் ரத்து; பராமரிப்பு பணிகளால் அறிவிப்பு.! 

Mattuthavani Arch (Photo Credit: @ThengaChutneyy X)
Mattuthavani Arch (Photo Credit: @ThengaChutneyy X)

அலங்கார வளைவை இடிக்கும் பணியில் நேர்ந்த சோகம்:

இதனையடுத்து, நேற்று இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அலங்கார இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அங்குள்ள சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஜேசிபி எர்த் மூவர் ஆபரேட்டர் நாகலிங்கம், ஆர்ச்சை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, சாலை வளைவை இடிக்கும்போது, திடீரென ஜேசிபி இயந்திரம் மீது நேரடியாக வளைவு விழுந்தது. இதில் ஜேசிபி இயந்திரமும் உருக்குலைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கிய நாகலிங்கம் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒப்பந்ததாரர் காயமடைந்த நிலையில், அவர் பணியிடத்தில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

தோரண வாயில் இடிக்கும் பணியில், விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட காணொளி:

விபத்து நடந்த பின்னர் எடுக்கப்பட்ட காணொளி:

மாட்டுத்தாவணியின் அடையாளம் இடிக்கப்பட்ட வருத்தத்தில் மதுரையன்ஸ்: