
பிப்ரவரி 11, மாயனூர் (Karur News): கரூர் (Karur) மாவட்டத்தில் உள்ள மாயனூர் (Mayanur), கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர் பகுதியில் இரயில் தண்டவாளம் உள்ளது. இன்று காலை முன்னாள் இரயில்வே ஊழியரான கலியமூர்த்தி என்பவர், இரயில் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது, தண்டவாளப்பகுதியில் (Railway Track Crack) விரிசல் ஒன்று தென்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கலியமூர்த்தி, பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரிவித்து இருக்கிறார்.
நடுவழியில் இரயில் நிறுத்தம்:
இதனையடுத்து, தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த இரயில்வே பணியாளர்கள், தண்டவாளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் (Ernakulam to Karaikal Express Train) நோக்கி பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த இரயிலை சிகப்பு கொடி காண்பித்து பணியாளர்கள் நடுவழியில் நிறுத்தி இருக்கின்றனர். TVK Vijay: தமிழ்நிலக் கடவுள் முருகப்பெருமானை போற்றுவோம் - தவெக விஜய் தைப்பூசம் வாழ்த்து.!
தண்டவாளத்தில் விரிசல்:
மேலும், அவ்வழித்தடத்தில் வரவிருந்த வாஸ்கொடகாமா - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் இரயில், கரூர் - திருச்சி (Karur Trichy Passenger Train) பயணிகள் இரயிலும் மாயனூர் (Mayanur Railway Station) உட்பட முந்தைய இரயில் நிறுத்தத்தில் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் என்பது தவிர்க்கப்பட்டது. இரயில்வே பணியாளர்கள் விரிசல் அடைந்த தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் இறங்கி விறுவிறுப்புடன் செயல்பட்டனர்.
அசம்பாவிதம் தவிர்ப்பு & குவியும் பாராட்டு:
இதனால் 45 நிமிடங்கள் தாமதமாக மூன்று இரயில்களும் அடுத்தடுத்து புறப்பட்டுச் சென்றது. உரிய நேரத்தில் விரிசல் கண்டறியப்பட்ட காரணத்தால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் இரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலுக்கான காரணம் குறித்து, இரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விரிசலை கண்டறிந்த கலியமூர்த்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.