
பிப்ரவரி 11, நீலாங்கரை (Chennai News): உலகத்தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசம் 2025 பண்டிகை, 11 பிப்ரவரி 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. 48 நாட்கள் விரதம் இருந்த முருக பக்தர்கள், இன்று முருகனின் அறுபடை வீடுகளை நோக்கி பயணித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களில் பெருந்திரளான முருக பக்தர்கள் இலட்சக்கணக்கில் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகமும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. அதேபோல, தைப்பூச நன்னாளில் பத்திரப்பதிவு செய்ய விரும்பும் மக்களின் வசதிக்காக, இன்று அரசுப்பொதுவிடுமுறையாக இருந்தபோதிலும், பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Gold Price Today: தங்கம் விலை புதிய உச்சக்கட்டம்.. சவரன் ரூ.64,480.. கிடுகிடு உயர்வால், பதறும் நகைப்பிரியர்கள்.!
தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்:
இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கவுள்ள நடிகர் விஜய், தனது அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காண்பித்து வருகிறார். இதனைமுன்னிட்டு தமிழர்கள் கொண்டாடும் தைப்பூச திருநாளுக்கு, விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட் பதிவில், "தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!" என தெரிவித்துள்ளார். Thaipusam 2025: தைப்பூசம் 2025 எப்போது? விரத முறைகள், வழிபாடுகள், சிறப்புக்கள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
தவெக தலைவர் விஜய் தைப்பூசம் 2025 vaalththu (TVK President Vijay Thaipusam Wish 2025):
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
— TVK Vijay (@tvkvijayhq) February 11, 2025