Died Victim Kamalesh | Crime File Pic (Photo Credit: Pixabay)

மே 20, பெரியகுளம் (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள பூதிப்புரம், வீரசின்னம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரின் மகன் கமலேஷ். 12ம் வகுப்பு வரை பயின்றுள்ளார். அங்குள்ள போடேந்திரபுரம் பகுதியில் 11ம் வகுப்பு மாணவி பள்ளியில் பயின்று வந்துள்ளார்.

மாணவியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்த கமலேஷ், அவரை காதல் வலையில் வீழ்த்தியதாக தெரியவருகிறது. இதனையடுத்து, சிறுமியுடன் காதல் நடந்துள்ளது. இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, பெண்ணின் பெற்றோர் கமலேஷை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 15 ம் தேதி பூதிப்புரத்திற்கு சென்ற கமலேஷ் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மகனை தேடி அலைந்த பெற்றோர், அங்குள்ள பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். Acid Attack: திருமணம் செய்ய மறுத்த கள்ளகாதலனின் மனைவி மீது ஆசிட் வீச்சு; வீடுபுகுந்து வெறித்தனம் காண்பித்த பெண்மணி.. ஊசலாடும் உயிர்.!

பூதிப்புரம் கல்லூரி வனப்பகுதியில் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கமலேஷின் சடலம் இருப்பதாக தகவல் தெரியவர, அங்கு விரைந்த அதிகாரிகள் கமலேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்த பெண்ணின் தந்தை தன்னாசி, தாய் தமிழ்செல்வி, மகன் ஜெயப்ரகாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் கமலேஷ் இவர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.