அக்டோபர் 26, வந்தவாசி (Tiruvannamalai Crime News): திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி, வெண்குன்றம் கிராமத்தில் தவளகிரி மலைக்கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் ஆயிரமாவது படிக்கட்டு பகுதியில், ஆயிரம் அடி உயரத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக 34 வயது பெண்மணியின் அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்டது.
அவரது கழுத்தில் தாலி உட்பட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, வந்தவாசி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், தமிழகம் முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களுக்கு பெண்ணின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது.
பெண் அணிந்து இருந்த தாலியை வைத்து, கடலூர் மாவட்ட த்தைச் சார்ந்த பெண்ணாக இருக்கலாம் என்று முதல் தகவலை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், சீர்காழியைச் சார்ந்த ஜெயராமன் என்பவர், தனது மனைவி நித்தியகல்யாணியை கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் காணவில்லை என்று கடந்த மாதம் 13ம் தேதி புகார் அளித்தது உறுதியானது. Ginger Tea Caution: மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு எதுவாக இஞ்சி தேநீர்; அதிகமாக குடிப்போருக்கு எச்சரிக்கை.. விபரம் இதோ.!
இதனையடுத்து நித்யாவின் புகைப்படத்தை வைத்து விசாரிக்கும் போது, இந்த சம்பவங்களில் தாலி முக்கிய சாட்சியாக அமைந்த நிலையில், ஒரே மாதிரி தாலி இருப்பது வந்தவாசி காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தவாசி காவல்துறையினர் நித்யாவின் பெற்றோரை சந்தித்து விசாரணை செய்த நிலையில், மலையில் கிடந்த சடலம் தங்களது மகள் எனக்கூறி கதறி அழுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி வெண்குன்றம் பகுதியில் அவருடன் பேசிய நபர்கள் குறித்த ஆய்வு செய்தபோது, நித்யாவின் கணவர் ஜெயராமன் ஒன்றரை மணி நேரம் அந்த மலைப்பகுதியில் இருந்தது உறுதியானது.
ஜெயராமனை அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டு வலைக்குள் கொண்டு வந்து நடத்திய விசாரணையில், தனது மனைவியின் கொலை உறுதி செய்யப்பட்டுள்ளது. தம்பதிகளான ஜெயராமன் - நித்யா ஆகியோருக்கு 11 வயதுடைய மகன் இருக்கிறார். ஜெயராமன் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது வந்தவாசியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு நித்யா செல்வதும், பின் சமாதானம் ஆனதும் கணவருக்கு அழைத்து வீட்டிற்கு அழைத்துச்செல்ல வரச்சொல்வதும் நித்யாவின் வாடிக்கையான செயல்களாக இருந்துள்ளது. Constable Gives CPR to Save Snake: மூர்ச்சையான பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து உரிபிழைக்க வாய்த்த காவலர்; குவியும் பாராட்டுக்கள்.!
இதனால் ஒருகட்டத்தில் ஜெயராமனுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு, வியாபாரத்தை கவனிக்க இயலாமல் மன உளைச்சலில் தத்தளித்துள்ளார். சம்பவத்தன்று தாய் வீட்டுக்கு சென்ற நித்யா, மீண்டும் சில நாட்கள் கழித்து கணவருக்கு தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச்செல்ல வற்புறுத்தி இருக்கிறார்.
வந்தவாசிக்கு கணவர் ஜெயராமன் சென்ற நிலையில், குடும்ப பிரச்சனையை தீர வெண்குன்றம் தவளகிரி மலைக்கு செல்லலாம் என நித்யாவை அழைத்துச் சென்று சாமி கும்பிட்டு, 1000 அடி உயரமுள்ள படிக்கட்டில் இருந்துள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அச்சமயம் மனைவியை கடுமையாக தாக்கிய ஜெயராமன், கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. விசாரணையில் உண்மையை அறிந்த அதிகாரிகள், ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.