Small Pox (Photo Credit: Wikimedia commons)

மே 11, சென்னை (Health Tips): சின்னம்மை (Small Pox) நோய் வேரிசல்லா என்ற வைரஸின் மூலமாக பரவும். குறிப்பாக கோடை காலங்களில் (Summer Season) அதிகளவு தாக்கம் ஏற்படலாம். இக்காலத்தில் இயல்பு வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும் நேரத்தில், குப்பைகளில் இருந்து வைரஸ் உருவாகி காற்றில் பரவும். இவ்வகையான வைரஸ் தான் சின்னம்மையை பரப்பும் வேரிசல்லா.

மேற்கூறிய சூழலுக்கு நடுவே வசிப்பவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு (Health Condition) சக்தி குறைவாக உள்ளவர்கள் சின்னம்மை வைரஸால் பாதிக்கப்படுவார்கள். இவர்களின் எச்சில் மூலமாக அவை பலருக்கும் பரவலாம். சின்னம்மையை சரிவர கவனிக்காமல் விட்டால் நிமோனியா, மூளைக்காய்ச்சல், சிறுநீரக அலர்ஜி போன்றவையும் ஏற்படலாம். Mitsubishi Motors: சென்னையில் உதயமாகிறது புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம்.. 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; அசத்தல் தகவல்.! 

சின்னம்மையை குணப்படுத்த தடுப்பூசிகள் உள்ளது என்றாலும், அவை சரியான பலனை தராது. நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், அவை தக்க வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக சின்னம்மை பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைகளில் போதிய மருந்துகளை இருப்பு வைக்கவும், தடுப்பு நடவடிக்கைளை எடுக்கவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. கோடையின் போது அதிகமாக பரவ வாய்ப்புள்ள சின்னம்மை, பருவம் கடந்ததும் பரவும் வாய்ப்புகள் குறைந்துவிடும்.