![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/03/நிழற்படம்-வைரல்-வீடியோ-காட்சி-கைது-செய்யப்பட்ட-குற்றவாளி-செந்தில்-குமார்-380x214.jpg)
மார்ச் 17, திருச்சி (Trichy News): திருச்சி மாநகரில் (Trichy) உள்ள வ.உ.சி சாலை, கேலக்சி டவர் தெருவில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 53). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் (Trichy Anna University) இ.சி.சி துறை தலைவராகவும், பேராசிரியையாகவும் (Professor) பணியாற்றுகிறார். தினமும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இருக்கும் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபயணம் (Walking Exercise) மேற்கொள்வது சீதாலெட்சுமியின் வழக்கம்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி மாலை நேரத்தில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றுள்ளார். அச்சமயம் அங்கிருந்த வாலிபர், தான் மறைத்து வாய்த்த மரக்கட்டையை கொண்டு பேராசிரியையின் தலையில் (Thief Murder Attempt) பலமாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்துபோன அவர் கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
அவரை தரதரவென இழுத்து சென்ற இளைஞர், சுவரில் சாய்த்து உட்காரவைத்துவிட்டு இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றார். மயக்கம் தெளிந்த பின்னர் எழுந்த பேராசிரியை, கண்டோமென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள. புகாரை ஏற்ற காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். YouTuber Prince: சாலையில் திரைப்பட பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய யூடியூபர் அதிரடி கைது.!
சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, பழமனேரி கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார் (வயது 32) பேராசிரியயை தாக்கியது அம்பலமானது. மது, கஞ்சா போதைக்கு அடிமையான செந்தில், திருச்சி காந்தி மார்க்கெட், தாராநல்லூர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
அவரை கைது செய்ய காவல் துறையினர் தீவிர visarana நடத்தி வந்த நிலையில், தாராநல்லூர் பகுதிக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு கொள்ளையடிக்கப்பட்ட இருசக்கர வாகனத்துடன் சென்ற அவரை அதிகாரிகள் பிடிக்க முயற்சித்தபோது, அவர் தப்பி சென்று சாலைத்தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இதனால் அவரின் இடது கால் உடைந்துபோனது.
எலும்பு முறிவால் கதறிய கொள்ளையனை மனிதாபிமானத்தோடு மீட்ட காவல் துறையினர், திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். கொள்ளையனிடம் இருந்து இருசக்கர வாகனம், செல்போன் மீட்கப்பட்டன. இதனிடையே பேராசிரியை தரதரவென இழுத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.