ஜனவரி 30, மயிலாடுதுறை: தெலுங்கு இயக்குனர் வம்சி (Vamshi Paidipally) இயக்கத்தில், இளையதளபதி விஜய் (Vijay Joseph) நடிப்பில், ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), பிரகாஷ் ராஜ் (Prakash Raj), சரத் குமார் (Sarat Kumar) உட்பட பலர் நடித்து 2023 பொங்கல் பண்டிகையையொட்டி (2023 Pongal Celebration) வெளியான திரைப்படம் வாரிசு (Varisu). இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வாரிசு திரைப்படம் குடும்ப பின்னணி கொண்ட கதை (Family sentiment Stroy) என்பதால், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை (Mayiladuthurai) நகரில் செயல்பட்டு வரும் யூரோகிட்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில் வாரிசு திரைப்படத்தை மாணவ - மாணவிகளுக்கு திரையிட்டு காண்பித்தனர்.
அவர்களது பள்ளியில் பயின்று வரும் குழந்தைகள் மற்றும் அருகே இருக்கும் முதியோர் இல்லத்தில் வசித்து வரும் முதியவர்கள் ஆகியோருடன் படம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மயிலாடுதுறையில் உள்ள திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது. Vande Bharat Train: வந்தே பாரத் இரயிலா? குப்பை தொட்டியா?.. செமி-புல்லட் இரயிலுக்கு வந்த சோகம்.. கண்கலங்கவைக்கும் மக்களின் அலட்சியம்.!
இந்த விஷயம் குறித்து பள்ளியின் ஆசிரியை தெரிவிக்கையில், "முதியோருக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று கூறுவார்கள். மாணவ செல்வங்கள் குடும்ப உறவுகளின் மாண்பு, கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு வாரிசு திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த காட்சியில் அருகே இருக்கும் முதியவர் இல்லத்தில் வசித்து வரும் ஆதரவற்றோரை அழைத்து வந்துள்ளோம். எங்களுடன் அவர்களும் படங்களை பார்த்தனர். பெரியவர்களின் ஆசீர்வாதம், பெற்றோரின் அன்பு, தமிழர்களின் வாழ்வியல் போன்றவற்றை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.