மே 03, செஞ்சி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி (Gingee, Viluppuram), செஞ்சிக்கோட்டை (Gingee Fort) மலையின் மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கன்னியம்மன் கோவில் (Sri Kamalakanniyamman Temple) திருவிழா நேற்று தேரோட்டத்துடன் நடைபெற்று முடிந்தது.
தென்னிந்தியாவில் (Ancient Ports Of South India) இன்று வரை நிலைத்து நிற்கும் செஞ்சிக்கோட்டையில், அப்பகுதியில் உள்ள பீரங்கி மேடு பகுதியில் வாழும் மக்களின் சார்பில் நடக்கும் செஞ்சிக்கோட்டை திருவிழா, பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து நடக்கும் மரபு வழி கொற்றவை வழிபாடு திருவிழா ஆகும். Team India: உலகளவில் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியா நம்பர் 1 இடத்தை பிடித்தது.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!
இன்று செஞ்சிக்கோட்டை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், செஞ்சிக்கோட்டையில் திருவிழா நடக்கும் 10 நாட்களும் அங்கு மக்கள் சென்றுவர அனுமதி இலவசமாக வழங்கப்படுகிறது. செஞ்சிக்கோட்டையின் அழகை ரசிக்க விரும்புவோருக்கு இது ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் நல்வாய்ப்பு ஆகும்.
கடந்த ஏப்ரல் 24ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் திருவிழா, மே 02ம் தேதியான நேற்றுடன் தேர் திருவிழாவுடன் நிறைவு பெற்றது. இடையில் உள்ள ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயதாரர்கள் சார்பில் திருவிழா நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறும்.
இந்த திருவிழாவை செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசித்து வரும் மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்து அம்மன் அருள் பெற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சி நகர காவல் துறையினர் சிறப்பாக மேற்கொண்டனர்.
Video & Photo Credits: செஞ்சி பசங்க