Women Escape With Minor Boy: 33 வயது இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுவன்.. படிப்பை கைவிட்டு வேலைக்கு சென்ற இடத்தில் விபரீத காதல்.!

வேலை பார்க்க வந்த இடத்தில் 17 வயது சிறுவனும், 33 வயது பெண்மணியும் காதல் வயப்பட்ட, தனியாக சேர்ந்து வாழலாம் என கன்னியாகுமரியில் உல்லாசமாக இருந்த ஜோடியை காவல் துறையினர் கைது செய்து பெண்ணை போக்ஸோ வழக்கில் சிறையில் அடைத்தனர்.

Women Escape With Minor Boy: 33 வயது இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுவன்.. படிப்பை கைவிட்டு வேலைக்கு சென்ற இடத்தில் விபரீத காதல்.!
Love Couple File Photo (Photo Credit: Pixabay)

ஜனவரி 31, இராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் (Rajapalayam, Virudhunagar) பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் (Minor Boy Missing) வீட்டில் இருந்து மாயமாகினார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

சிறுவன் கன்னியாகுமரியில் (Kanyakumari) இஇருப்பதாக தகவல் தெரியவரவே, அங்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனை மீட்டனர். மேலும், சிறுவனோடு இருந்த 33 வயது பெண்ணையும் (33 aged Young Women) உடன் அழைத்து வந்தனர். விசாரணையில், "தனது பள்ளிப்படிப்பை (School Drop Student) பாதியிலேயே நிறுத்திய சிறுவன், இராஜபாளையம் தாலுகாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, தன்னுடன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 33 வயது இளம்பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்திய சிறுவன், பெண்ணை காதலிக்க (Love) தொடங்கியுள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணம் (Married Women) ஆகி குழந்தைகள் உள்ள நிலையில், சிறுவனின் பாசத்தில் விழுந்த இளம்பெண்ணும் அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். இதனால் வயது மீறிய (Married Women affair With Minor Boy) காதல் சம்பவம் நடந்துள்ளது. Thaadi Balaji Wife Nithya Issue: துணிவு படம்பார்த்துவிட்டு வந்த நித்யாவுக்கு நடந்த சம்பவம்.. இலஞ்சத்தால் தடம்புரளுகிறதா காவல்துறை?.. பரபரப்பு பேச்சு.!

இதற்கிடையில், இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்து, வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இருவரும் கன்னியாகுமரியில் தனிமையிலும் சேர்ந்துவிட்டனர்" என்ற தகவலும் உறுதியாகவே, காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து 33 வயது இளம்பெண்ணை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் சிறுவன் பெற்றோர் விருப்பத்தின் பேரில் ஒப்புதல் கடிதமானது எழுதி வாங்கப்பட்டு சிறுவன் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட இளம்பெண் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 31, 2023 11:50 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 31, 2023 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).