ஜனவரி 23, இராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் (Rajapalayam, Virudhunagar), சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் (PACR Polytechnic College, Autonomous Institutuion, Rajpalayam) நூலக மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
தந்தையின் மீது அதிக பாசம் கொண்ட முத்துக்குமார், இராணுவத்திலிருந்து (Army Retired) ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும், சமூக ஆர்வலரும் (Social Activist & Nature Lover) கூட. Engaged Girl Suicide: அந்த விசயத்திற்கு வற்புறுத்திய தாய்.. திருமணத்திற்கு 10 நாட்கள் முன் பெண் விபரீத முடிவு.. காரணம் இதுதான்..!
அவரின் கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து குளங்களை சுத்தம் செய்வது, கருவேலி மரங்களை அகற்றுவது, பிளாஸ்டிக் பொருட்களை வைத்து உட்காரும் மேடை அமைப்பது, மரம் நடுவது என பல சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விசயங்களை செய்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு வந்து செல்ல மிதிவண்டியையே (Cycling) உபயோகம் செய்து வருகிறார்.
View this post on Instagram
அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திவிட்டார். இந்த நிலையில், அவர் தனது தந்தையின் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் பொருட்டு பல நேரங்களில் அதனை பகிர்ந்து இருப்பார். இந்நிலையில், தனது கைகளில் தந்தையின் புகைப்படத்தை பச்சையாக குத்தி இருக்கிறார். அதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "இன்று அப்பாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள். புத்திக்கு புரிந்தது மனதிற்கு தான் புரியவில்லை இறந்தவர்கள் திரும்பி வர மாட்டார்கள் என்று.. நீங்கள் எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கிறீர்கள் அப்பா" என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram