Bathing (Photo Credit: Pixabay)

அக்டோபர் 11, சென்னை (Health Tips): மனிதனின் உடல் சுகாதாரத்திற்கும், உள்ளத்தின் தூய்மைக்கும் முக்கியமாக இருப்பது குளியல் (Bathing). உலகில் மனிதன் பிறந்து காடு மேடாக திரிந்தாலும், தேங்கியிருந்த நீரை கண்டாலோ, ஓடும் ஆற்று நீரை கண்டாலோ விரைந்து சென்று குளிப்பது மனிதனின் இயல்பு.

குளியல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் (Benefits & Steps of Bating) பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் குளியலை நாம் முறைப்படி குளிக்கிறோமா? என்றால் பெரும் கேள்விக்குறியே விடையாக மிஞ்சி இருக்கும். ஏனெனில், இன்றளவில் காலம் மாறிவிட்டது.

குளித்தாலும், குளிக்காவிட்டாலும் மனிதர்களை புத்துணர்ச்சியோடு காண்பிக்க அறிமுகமாகியுள்ள வாசனை திரவியங்கள், குளிக்காமல் இருப்பதால் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை சரி செய்கிறது. இதனை நம்பி இருக்கும் பலருக்கும் இவ்வரி பொருந்தும்.

மனரீதியான குறையும்: ஆனால், தினமும் காலை - மாலை என குளிப்போரின் உடல் மட்டுமின்றி மனமும் தூய்மையாக இருக்கும் என கூறலாம். இவ்வாறானவர்கள் பெரும்பாலும் மனஅழுத்த பிரச்சனையை எதிர்கொள்ளாமல், அவை இருப்பினும் குளித்த பின் உடல் புத்துணர்ச்சி பெற்று மனரீதியான அழுத்தம் குறையும். Rajasthan Assembly Poll: இராஜஸ்தான் மாநில தேர்தல் தேதியை மாற்றம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்: காரணம் என்ன?.. அதிரடி விளக்கம்.! 

Bathing Water Falls & Shower (Photo Credit: Pixabay)

இதய செயல்பாடு: குளிர்ந்த நீரில் நாம் குளிப்பதால் சருமம் இறுக்கமாகும். முகத்தில் இருக்கும் வியர்வை துளைகள் குறைகின்றன. சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதயத்தின் செயல்பாடுகள் மேம்படும், இதயநோயின் ஆபத்து குறையும். உடலின் இரத்த ஓட்டம் சீராகும். மூட்டு, தசை வலி குறையும்.

பாக்டீரியா விரட்டியடிக்கப்படும்: தினமும் குளியலை தவிர்த்தால் ஏற்படும் தலை முடி அழுக்கு பிரச்சனை சரியாகும். உடலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும். உடல் சூடு வெகுவாக குறைக்கப்படும். பாக்டீரியா தொற்றுகள் விரட்டியடிக்கப்படும். நுரையீரல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இரத்த்த்தம் ஆக்சிஜனை உறிஞ்சும் திறன் அதிகரிக்கப்பட்டு, சுவாச மண்டலம் மேம்படும்.

கடமை குளியல் கூடாது: குளிக்கும்போது அறைவெப்ப நிலையில் இருக்கும் நீரை பயன்படுத்தி குளிப்பது நல்லது. குளிர்காலத்தில் குளிர்ந்த நீரைக்கண்டு நடுங்குவோர் இளம் சூடுள்ள நீரை பயன்படுத்தி குளிக்கலாம். குளிக்கும்போது உடலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும் அளவு தேய்த்து குளிக்க வேண்டும். கடமை எனவும் குளித்தால் கூடாது.

குளிக்கும் முறை: அதேபோல, முதலில் கால்கள்-கைகளில் நீரை ஊற்றி நீரின் குளிர்ந்த நிலையை மூளைக்கு உணர்த்தி, பின் படிப்படியாக மேலே வந்து இறுதியில் தலையில் நீர் ஊற்றுவதே சரியான முறையிலான குளியல். அதுவே உடலில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றும். காக்க குளியலும் சரியானது இல்லை. உடலில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றும் அளவு குளிக்க வேண்டும்.