மார்ச் 26, ஒட்டாவா (Technology News): கனடா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய தனியார் நிறுவனமான பெல் (Bell), அந்நாட்டில் தொலைத்தொடர்பு சேவையை பிரதானமாக வழங்கி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், காணொளி முறையில் நடைபெற்ற 10 நிமிட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சுமார் 400 ஊழியர்கள் கட்டாய பணிஓய்வு வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின் அதிரடி: நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களும், எவ்வித இரக்கமும் இன்றி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதன் ஊழியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். கடந்த 5 மாதங்களாவே மனித வளமேம்பாடு நிர்வாகம் மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தரப்பில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்துள்ளன. அதனைத்தொடர்ந்து, தற்போது பணிநீக்கம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. Bird Flu Kills College Student: அச்சச்சோ.. பேராபத்து.! பறவைகளிடம் இருந்து மண்டிகர்களுக்கு பரவியது H5N1 பறவைக்காய்ச்சல்... 21 வயது கல்லூரி மாணவர் பலி.!
400 பேர் பணிநீக்கம்: மொத்தமாக தங்களின் பணியாளர்களில் 9% ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மிற்கோ பிபிக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து இருந்தார். இதன் வாயிலாக 4800 பேரின் வேலை என்பது கேள்விக்குறியானது. அதன் முதற்கட்டமாக 400 பேர் மொத்தமாக 10 நிமிட காணொளி ஆலோசனை கூட்டத்திற்கு பின் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது நடந்துள்ளது. 19 ஆயிரம் பணியாளர்களுடன் பெல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.