பிப்ரவரி 11, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த நாட்களில் இருந்து தற்போது வரை, அதனை தவறான வழியில் பயன்படுத்தும் நபர்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகள் வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து வருகின்றன. உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என்ற ஆசை வார்த்தையில் தொடங்கி, வெளிநாட்டு காதலி, உல்லாச வாழ்க்கை என ஒவ்வொரு விஷயத்திலும் மக்களை தேடித்தேடி ஏமாற்றும் இந்த கும்பல், குறிப்பிட்ட தருணத்தில் சரியாக தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தி அதிக மக்களை ஏமாற்றி பெரும் தொகையை பறித்து மோசடியை அரங்கேற்றி வருகிறது.
1.4 இலட்சம் எண்கள் முடக்கம்: இதனைத் தடுத்து தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி விவகாரங்களில் ஈடுபட்ட 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தெரிவித்திருக்கிறது நிதி சேவைகளுக்கான செயலாளர் விவேக் ஜோசி சமீபத்தில் நடைபெற்ற நிதி பாதுகாப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் அவர் தனது விவாதத்தை முன் வைத்திருந்தார். இந்த கூட்டத்தின் வாயிலாக 1.40 லட்சம் செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதிகளவு மக்களுக்கு எஸ்எம்எஸ் போன்றவற்றை அனுப்பும் நிறுவனங்களை ஆய்வு செய்து, அதில் முறைகேடுகள் சார்ந்த விசயங்களில் ஈடுபட்ட 19 ஆயிரத்து 776 நிறுவனங்களை தனது கண்காணிப்பு பட்டியலில் சேர்த்து இந்த அதிரடி முடக்கத்தில் ஈடுபட்டுள்ளது. 5 Aged Child Rape by 2 Minors: ஆபாச படம் பார்த்து அதிரவைக்கும் கொடுமை.. 5 வயது சிறுமியை சீரழித்த 8, 10 வயது சிறார்கள்.!
எதிர்கால நலனுக்காக அதிரடி நடவடிக்கை: அதேபோல இந்த நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குறுஞ்செய்திகளும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் இது தொடர்பான பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவும் தற்போது அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் எந்தவிதமான தீங்கும் மக்களுக்கு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.