Chandrayaan 3 (Photo Credit: Twitter)

ஜூலை 08, இஸ்ரோ (ISRO): இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சந்திராயன் 3 நிலவு ஆராய்ச்சி திட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் செய்யப்பட்டு வருகின்றன. செயற்கைகோளை ஏவுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

சந்திராயன் 3ல் இடம்பெற்றுள்ள ராக்கெட் பாகங்களில் மின்சார விநியோகம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சந்திராயன் 3 நிலவு திட்டத்திற்கான செயற்கை கோள் ஜூலை மாதம் 14ம் தேதி மதியம் 02:35 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. Samsung Galaxy M34 5G: ரூ.16,999 விலையில் அமேசான் தளத்தில் வெளியானது சாம்சங் கேலக்சி M34 5G.. அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ..!

இதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், சந்திராயன் செயற்கை கோளின் பாகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுவிட்டது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து நேரடியாக சந்திராயன் விண்ணில் ஏவப்படுவதை காணுவதற்கு https://lvg.shar.gov.in/VSCREGISTRATION என்ற இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்து வரலாம்.