செப்டம்பர் 21, சென்னை (Chennai News): தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam) ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்கிறார். நாளொன்றுக்கு 2 முதல் 3 மாவட்டங்கள் வரை பிரச்சார பணிகளை மேற்கொள்ள தவெக தலைமை வியூகம் வகுத்துள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் சனிக்கிழமை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களான திருச்சி (Trichy), அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சார பணிகளை மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது திருச்சி மற்றும் அரியலூரில் ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால் பெரம்பலூரில் இறுதியாக பிரச்சாரம் நடைபெறவில்லை. மாற்று தேதி அறிவிக்கப்படும் என தவெக தலைமை அறிவித்தது. 'தம்பி வா.. தலைமை தாங்க வா' - தவெக தலைவர் விஜயை முதல்வர் பதவிக்கு அழைத்த அண்ணா.. தீயாய் பரவும் வீடியோ.!
தவெக விஜய் நாகப்பட்டினம், திருவாரூரில் பிரச்சார பயணம் (TVK Vijay Nagapattinam & Thiruvarur Campaign):
அதனைத்தொடர்ந்து, நேற்று விஜய் நாகப்பட்டினம் (Nagapattinam), திருவாரூர் (Thiruvarur) மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டார். பிரச்சார பயணத்துக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்ட விஜய், திருச்சியில் இருந்து நாகபட்டினத்துக்கு சாலை மார்க்கமாக வந்தார். இந்நிலையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ஏன் சனிக்கிழமைகளில் பிரச்சாரம்? என பலரும் கேள்வி எழுப்பி விமர்சனங்களை முன்வைப்பதாக தெரிவித்தார். மேலும் அதற்கான காரணம் என்ன? என்பதற்கு பதிலும் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எந்தவிதமான இடையூறும் எந்த நபர்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் தான் வாரத்தின் இறுதி நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓய்வு நாட்களில் நாங்கள் பயணத்தை திட்டமிட்டு இருக்கிறோம். அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வருவதாலேயே ஓய்வு நாளில் நாங்கள் உங்களை சந்திக்கிறோம்" என பேசினார். தொடர்ந்து திமுக குறித்த விமர்சனங்களையும் , முதல்வர் ஸ்டாலின் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்ற புகாரையும் முன்வைத்தார்.